வளசரவாக்கம் பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

வளசரவாக்கம் பகுதியில் வரும் 15-ந்தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-13 13:11 GMT

பைல் படம்

நெம்மேலியில் அமைந்துள்ள நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குடிநீர் உந்து குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 15-ந் தேதி மதியம் 2 மணி முதல் 16-ந்தேதி அதிகாலை 2 மணி வரை மண்டலம் 11, 12, 13, 14 மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுதூர், ராதா நகர் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நந்தம்பாக்கம், வளசரவாக்கம், நொளம்பூர், ராமாபுரம், ஆலந்தூர், வேளச்சேரி, பள்ளிப்பட்டு, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https:cmwssb.tn.gov.in/ என்ற இணைய தள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News