மாநகர ஆணையாளரிடம் மனு அளித்த எஸ்டிபிஐ கட்சியினர்
கலவரத்தை தூண்ட நினைக்கும் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருநெல்வேலி காவல் ஆணையாளரிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு அளித்தனர்.;
Update: 2024-06-12 13:38 GMT
கலவரத்தை தூண்ட நினைக்கும் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருநெல்வேலி காவல் ஆணையாளரிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு அளித்தனர்.
தமிழகத்தில் கலவரம் செய்தால் தான் பாஜகவை வளர்க்க முடியும் என்ற இந்து முன்னணி நிர்வாகி மற்றும் பாஜக நிர்வாகிகள் பேசிய ஆடியோ வைரலான நிலையில் இன்று (ஜூன் 12) எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் மாநகர காவல் ஆணையாளரிடம் கலவரத்தை தூண்ட நினைக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.இதில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.