எடப்பாடியில் தெரு நாய்கள் அட்டகாசம் - பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதி
நாய்கள் அட்டகாசம் - எடப்பாடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
Update: 2024-02-16 09:31 GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட எடப்பாடி பஸ் நிலையம், நைனாம்பட்டி, வெள்ளாண்டி வலசு, தாவாந் தெரு, ஹவுசிங் போர்டு, ஆகிய மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலை பகுதிகளில் தினசரி ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்ற இந்த நேரங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி இடையூறு ஏற்பட்டு விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் காலை மாலை நேரங்களில் பள்ளிக்குச் சென்று வரும் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளி வாகனத்தில் ஏற்ற,இறக்க செல்லும் பொழுது தெருநாய்களின் தொந்தரவால் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும். அரசு மருத்துவமனை பகுதிக்குள் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் உள் நோயாளிகள் பயந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எடப்பாடி நகராட்சி நிர்வாகம் தெரு நாய்க்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.