மாதர் சங்கம் சார்பில் தெருமுனைக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தெருமனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-19 00:48 GMT

மாதர் சங்க தெருமுனை கூட்டம்

வெறுப்பு அரசியலை தோற்கடிப்போம், பெண்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்போம் என வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில், பூதலூர் நான்கு ரோட்டில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மாதர் சங்கம் ஒன்றியத் தலைவர் என்.வசந்தா தலைமை வகித்தார்.

ஒன்றியச் செயலாளர் வி.அஞ்சலிதேவி வரவேற்றார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலாண்டினா, மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கலைச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில், ஜி.காந்தி, எஸ்.மலர்கொடி, ஆர்.டெய்சி ராணி, ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், "100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி, கூலியை ரூ.650 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். பூதலூர் பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News