மொத்தமாக மது விற்றால் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை

மொத்தமாக மது விற்றால் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-03-11 11:05 GMT

டாஸ்மாக்

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்பட்சத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

அதேசமயம், வாக்காளர்களுக்கு பணம், மதுபானங்கள், பிரியாணி போன்றவற்றை அரசியல் கட்சியினர் கொடுப்பார்கள் என்பதால் அதனை தேர்தல் பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பார்கள். குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என்று டாஸ்மாக் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 191 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் 99 கடைகளில் மட்டும் பார்கள் செயல்பட்டு வருகிறது.

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் அரசு உத்தரவுப்படி டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தனஞ்செயன் எச்சரிக்கை செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்.

இதனால் தேர்தல் நடத்தை விதிகளின்படி மொத்தமாக மதுபானங்கள் விற்கக்கூடாது என்று ஏற்கனவே கடை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். முறைகேடு நடப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Tags:    

Similar News