குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை !
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகளை கடத்துவதாக பொய்யான தகவல்களை பகிர்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-03-07 05:08 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகளை கடத்துவதாக பொய்யான தகவல்களை பகிர்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறறை விடுத்துள்ள செய்திக்குறிப்பு; கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் குழந்தை கடத்தல் செய்வதாக, அதிவேகமாக உண்மைக்கு மாறான பொய்யான தகவல்கள் சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இவ்வாறான குழந்தை கடத்தல் பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. இதுவரை குழந்தைகள் காணாமல் போனதாகவோ அல்லது கடத்தப்பட்டதாகவோ எந்த ஒரு தகவலோ, புகாரோ மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு காவல் நிலையங்களிலும் வரவில்லை. எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய தேவையில்லை. குழந்தைகளை கடத்துவதாக வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் போலியானவை. பொய்யான செய்திகளை சமூக வளைதளங்களில் யாரும் பகிரவேண்டாம். மேலும் அவ்வாறு பகிர்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக அவசர உதவி எண் 100 -ஐ தொடர்புகொள்ளவும் என அறிவிப்புக்கப்பட்டுள்ளது.