குழந்தை திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை

குழந்தை திருமணங்கள் நடத்துபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளார்.

Update: 2024-06-25 03:43 GMT

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் 2 குழந்தை திருமணம் நடக்க இருப்பதை கண்டறிந்து தடுக்கப்பட்டது. குழந்தை திருமணங்களை தடுக்க தொடர்ந்து கிராமங்களில் ஆய்வு செய்ய வேண்டும். குழந்தை திருமணங்களை நடத்துபவர், ஏற்பாடு செய்பவர், பங்கேற்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுமென மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் எச்சரித்தார்.
Tags:    

Similar News