குமரி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று எச்சரிக்கை
கன்னியாகுமரி கடல் பகுதியில் மற்றும் மன்னர் வளாகுடா பகுதிகளில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்த நிலையில், வங்க கடல் பகுதியில் மே 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இது மே 24ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இந்த நிலையில் இந்திய கடல் தகவல் சேவை மையம் மீனவர்களுக்கு பல்வேறு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று 20ஆம் தேதி கன்னியாகுமரி கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். சில வேளையில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதனைப் போன்று தமிழ்நாடு கடல் பகுதியிலும் அதனை ஒட்டி தென்மேற்கு வங்க கடல் பகுதியிலும் சில நேரங்களில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். இதனைப் போன்று 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கன்னியாகுமரி கடல் பகுதியில் மற்றும் மன்னர் வளாகுடா பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 65 கிலோ மீட்டர் உயரத்திலும் பலத்த காற்று வீசும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.