பலத்த சூறைக்காற்று: வேரோடு சாய்ந்த புளிய மரம்!

வேலூர் அருகே சூறைக்காற்றில் புளியமரம் வேரோடு சாய்ந்ததில் மின் கம்பிகள் அறுந்து மின்சாரம் தடைபட்டது.

Update: 2024-06-28 05:21 GMT
வேலூர் மாவட்டம் ஊசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்று அடித்தது. அதனால் குளத்துமேடு சாலையோரம் இருந்த புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்ததால் கம்பிகள் எதிர் திசையில் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. மேலும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்
Tags:    

Similar News