வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு போராட்டம்!
கண்ணைக் கட்டிக் கொண்டிருக்கும் நீதி தேவதையை! வாயை கட்ட வைத்த ஒன்றிய அரசை கண்டித்து. வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்.
By : King 24x7 Angel
Update: 2024-07-13 11:45 GMT
கண்ணைக் கட்டிக் கொண்டிருக்கும் நீதி தேவதையை! வாயை கட்ட வைத்த ஒன்றிய அரசை கண்டித்து. வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர். மூன்று குற்றவியல் சட்டங்களின் பெயர்களையும் சட்ட பிரிவுகளையும் மாற்றம் செய்து மறுசீரமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் உரிமைக்குரல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி செயலாளர் புலேந்திரன் கா. முருகானந்தம் கலந்து கொண்டார் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் வழக்கறிஞர் திலீபன் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன் கலந்து கொண்டனர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. `ஜனநாயகப் படுகொலை!' 140 கோடி இந்திய மக்களிடம் 22 மொழிகள் உள்ளடக்கிய ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரத்துடன் இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது "ஜனநாயகப் படுகொலையே"! இந்திய குற்றவியல் சட்டத்தை (IPC) `பாரதிய நியாய சன்ஹிதா-2023’ என்ற பெயரிலும், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை (CRPC) `பாரதிய நாகரிக் சுரக்ஷா-2023’ என்ற பெயரிலும், இந்திய சாட்சிகள் சட்டத்தை (IEC) `பாரதிய சாக்ஷிய விதேயக்-2023’ என்ற பெயரிலும் திருத்தி, மூன்று புதிய மசோதாக்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் தாக்கல்செய்யப்பட்டன. பாரதிய நியாய சன்ஹிதா-2023’, `பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா-2023’, `பாரதிய சாக்ஷிய விதேயக் 2023’... இவையெல்லாம் இந்திய குற்றவியல் சட்டத்துக்குச் சூட்டப்படவிருக்கும் ‘புதிய’ இந்தியாவின், புதிய சட்ட பெயர்கள். சட்டங்களின் சாராம்சமும் மாறுகிறது. இதனால், ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ஜனநாயக நாடான இந்தியாவை, மத்திய பா.ஜ.க அரசு சர்வாதிகாரப் போக்குடன், பொதுமக்களின் கருத்தைக் கேட்காமல் அவசர அவசரமாக இந்த மசோதாக்களைக் கொண்டுவந்தள்ளது. இந்த மசோதாக்களை, கொல்லைப்புறமாகக் கொண்டுவருவதற்கு காரணம் ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் நோக்கமும், மேலும் சர்வாதிகார ஆட்சி கொண்டுவர முயலும் முயற்சியே! 3 புதிய குற்றவியல் சட்டங்களை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 348-ன் அடிப்படையில் ஆங்கிலத்தில் பெயர் மாற்றக் வேண்டும்.ஜனநாயகத்தில் கொடுக்கப்பட்ட உரிமைகளை பறிக்கும் 3 புதிய குற்றவியல் சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்வைக்கின்றது.