யோகாவில் உலக சாதனை படைத்த மாணவி

பேராவூரணியை சேர்ந்த மாணவி சர்வாங்காசனத்தில் உலக சாதனை படைத்தார்.

Update: 2024-06-21 07:51 GMT

 சர்வாங்காசனம் செய்யும் மாணவி ஹாசினி 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் திருமூலர் யோகா நிலையம் அரங்கில், யோகாவில் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யோகா நிலைய மாணவியான   பாலகணேசன் - செல்வமணி தம்பதியின், 7 ஆம் வகுப்பு பயிலும் பா.ஹாசினி (11) என்பவர் ஆசனங்களின் ராணி எனப்படும் சர்வாங்காசனத்தில் சாதனை படைத்தார். இவர் 30 நிமிடம் 30 வினாடிகளில் இந்த ஆசனத்தை செய்து சாதனை படைத்தார்.  இதையடுத்து, இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பின் முதன்மை நடுவர் நாகராஜன், நடுவர் சீதாலட்சுமி ஆகியோர் சாதனையை உறுதி செய்து, டோய் ஃபெஸ்ட் நிறுவனர் நிர்மல்ராஜ் முன்னிலையில் பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினர்.

  முன்னதாக நிகழ்ச்சியை பேராவூரணி மருத்துவர் துரை.நீலகண்டன் தொடங்கி வைத்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் குழ.செ.அருள் நம்பி முன்னிலை வகித்தார்.  சாதனை படைத்த மாணவியை பேராவூரணி நகர வர்த்தக கழகத் தலைவர் ஆர்.பி. ராஜேந்திரன், திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், சேதுபாவாசத்திரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து, முடச்சிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி, தொழிலதிபர் முகமது முஸ்கீர், ஐயப்பா சேவா சமாஜம் மாநில இணை பொதுச் செயலாளர் கமலா கே.ஆர்.வி.நீலகண்டன்,  இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் உலக சாதனையாளர்கள் ஏ.எஸ்.ஏ.தெட்சிணாமூர்த்தி, தோப்புக்கரணம் ஜெ.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்தினர். தொடர்ந்து திருமூலர் யோகா நிலையம் நிறுவனர் யோகி சு.விமல், சிரசாசனத்தில் ஏற்கனவே படைத்த உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News