பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை.
ராமாபுரம் அருகே செல்போனை பயன்படுத்த வேண்டாம் என பெற்றோர் கண்டித்ததால் 8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2024-01-17 03:16 GMT
ராமாபுரம், அன்னை சத்யா நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 41; கட்டட தொழிலாளி. இவரது மகன் ஆதித்யா, 13. இவர், ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். ஆதித்யா தன் தாய் நித்யாவின் மொபைல் போனை வாங்கி, வீடியோ பார்ப்பது வாடிக்கை. இதை பெற்றோர் கண்டித்தனர். இதனால், மனமுடைந்த ஆதித்யா, நேற்று முன்தினம் பள்ளிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்தார். தாய் தந்தை பணிக்கு சென்றனர். பள்ளிக்கு சென்ற ஆதித்யாவின் தம்பி ரூபேஷ், மாலை வீடு திரும்பியபோது, ஆதித்யா தன் தாயின் புடவையில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. ராமாபுரம் போலீசார் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.