திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் முன் மாணவர் சங்கம் போராட்டம்
இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்;
Update: 2023-11-29 01:53 GMT
இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட போது
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் முன்பு மதம், இன, மொழி, ஜாதிகளை கடந்து பன்முகத்தன்மையோடு இருக்க வேண்டிய அரசு கல்வி நிலையத்தில் அரசு பணத்திலேயே மத செயல்பாடுகளை முன்னெடுத்த பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரியாரை தரக்குறைவாக பேசிய ஏபிவிபி அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.