சேலம் ஹோலிகிராஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் பேரவை விழா

சேலம் ஹோலிகிராஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் பேரவை தலைவர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

Update: 2024-06-28 10:58 GMT

மாணவர் பேரவை தலைவர் விழா

சேலம் ஹோலிகிராஸ் இன்டர்நேஷனல் பள்ளி (சி.பி.எஸ்.இ.) மாணவர் பேரவை தலைவர்கள் மற்றும் பல்துறை மன்ற மாணவர்களின் பதவி ஏற்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜாக்குலின் தலைமை தாங்கினார். வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து மாணவர் பேரவை தலைவர்கள், சங்க தலைவர்கள் பொறுப்பு ஏற்று கொண்டனர். பின்னர் உலக போதைப்பொருட்கள் ஒழிப்பு தின உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

விழாவில் ஹோலிகிராஸ் இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் ஸ்டீபன், தாளாளர் சேசுராஜ், நிர்வாகி ஏசுதாசன் ஆகியோர் கலந்து கொண்டு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்தனர்.

பின்னர் இந்தாண்டிற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News