லால்குடி அருகே மரத்தில் பைக் மோதி மாணவா் உயிரிழப்பு

லால்குடி அருகே புதன்கிழமை மரத்தில் பைக் மோதி ஐடிஐ மாணவா் உயிரிழந்தாா்.

Update: 2024-02-22 01:25 GMT

பைல் படம்

லால்குடி அருகே குமுளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் விஷால் (18). சமயபுரம் பகுதி தனியாா் ஐடிஐ முதலாமாண்டு மாணவா். இவா் தச்சங்குறிச்சியில் இருந்து பைக்கில் புதன்கிழமை மாலை குமுளூா் நோக்கி வேகமாகச் சென்றபோது சாலையோரப் புளிய மரத்தில் பைக் மோதி இறந்தாா். தகவலறிந்த காணக்கிளியநல்லூா் போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்
Tags:    

Similar News