பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி

சகோதரி மஞ்சள் நீராட்டு விழாவிற்க்கு பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து சகோதரன் உயிரிழந்தார்.;

Update: 2023-11-24 07:26 GMT

பிரவின்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஊணாம்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவரது மகன் பிரவின்(15). ஊத்தங்கரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் அவரது சகோதரிக்கு மஞ்சள் நீராட்டு விழாவிற்காக, வீட்டின் முன் பந்தல் அமைக்கும் பணியின் போது, எதிர்பாராத விதமாக கையில் இருந்த இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மாணவன் பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News