வாகன விபத்தில் மாணவி பலி - உறவினர்கள் சாலை மறியல்

சோளிங்கர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு கால்களையும் இழந்த நிலையில் அவரது தந்தை சிகிச்சை பெற்று வருகிறார்.;

Update: 2024-01-02 02:35 GMT

பிரியா 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பிலாஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் சோளிங்கரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் பிரியா 14. இவர் சோளிங்கர் அடுத்த அம்மையார் குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சங்கர் பணிபுரியும் தனியார் நிறுவனம் அவரது மகள் அனைத்து பாடப்பிரிவிலும் முதலிடம் பெற்று வருவதால், வருடத்தின் முதல் நாளான நேற்று அந்த மாணவியை அழைத்து தொழிற்சாலையை சுற்றி பார்ப்பதற்கவும் மற்றும் சிறப்பு தொகுப்பு அளிப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தது. 

Advertisement

அந்த நிகழ்ச்சிக்காக தனது மகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.  அப்போது மத்தேரி கிராமத்திலிருந்து சோளிங்கர் நோக்கி வந்த கார் அதிவேகமாக வந்து தந்தை மற்றும் மகள் மீது மோதிய விபத்தில் தந்தை கண் முன்னே மகள் பிரியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் சங்கர் இரண்டு கால்களையும் இழந்து சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய கார் மற்றும் விபத்தை ஏற்படுத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தணி சோளிங்கர் செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை முன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து சோளிங்கர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News