வீட்டை விட்டு வெளியேறிய மாணவன் - பெற்றோரிடம் ஒப்படைத்த போலிசார் !!

குஜராத்திலே தங்கி இருந்த மாணவனுக்கு பாட்டி வீட்டுக்கு வந்தது பிடிக்கவில்லை என்பதால், தந்தையிடம் செல்ல தீர்மானித்து ரயிலில் குஜராத் செல்ல ரயில் ஏறியதாக தெரிய வந்தது. இதையடுத்து தாயிடம் மாணவரை ஒப்படைத்தனர்.;

Update: 2024-05-25 09:21 GMT

கன்னியாகுமரி 

கன்னியாகுமரி அருகே லீபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜியோலின் இம்மானுவேல். இவர் குஜராத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜீவா மற்றும் 17 வயது மகன் குஜராத்தில் தந்தையிடம் தங்கி இருந்து, மகன் அங்கு பிளஸ் டூ படித்து வந்தார்.தற்போது தேர்வுகள் முடிந்து விட்ட நிலையில் கன்னியாகுமரியில்  உள்ள தனது பாட்டி வீட்டிற்கு மாணவன் தனது தாயுடன் வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாணவர் நடைபயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பி உள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. உடனடியாக தாயார் மகனை தொடர்பு கொண்டபோது மாணவர் கன்னியாகுமரி பீச்சில் இருப்பதாகவும் சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். ஆனால் மகன் கூறியபடி வீட்டுக்கு வராததால் உடனே ஜீவா கன்னியாகுமாரி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

Advertisement

கன்னியாகுமரி போலீசார் மாணவனை பீச் முழுவதும் தேடியும்  கண்டுபிடிக்க முடியாததால் உடனடியாக மாணவனின் செல்போன் லொகேஷன் மூலம் தேடினர். அப்போது மாணவன் ரயில் மூலம் கேரளாவுக்கு சென்று கொண்டிருப்பது போலீசார் கண்டுபிடித்தனர். உடனே கேரளா சென்ற போலீசார் கொல்லம் ரயில் நிலையத்தில் மாணவனை மீட்டனர்.தொடர்ந்து நடத்திய விசாரணையில் குஜராத்திலே தங்கி இருந்த மாணவனுக்கு பாட்டி வீட்டுக்கு வந்தது பிடிக்கவில்லை என்பதால், தந்தையிடம் செல்ல தீர்மானித்து ரயிலில் குஜராத் செல்ல ரயில் ஏறியதாக தெரிய வந்தது. இதையடுத்து தாயிடம் மாணவரை ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News