செங்கல்பட்டு மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-06 14:10 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் நீட் தேர்வு மையத்திற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில், நென்மேலி கோகுலம் பொதுப்பள்ளி, மேல்மருவத்துர் அடுத்த பள்ளிபேட்டை ஜி.பி., பொதுப்பள்ளி, செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளி, பழவேலி ஸ்கேட் பள்ளி. மாமண்டூர் பிரசன்னா வித்யா மந்திர் பள்ளி, திருப்போரூர் அம்மாபேட்டை சி.டி.எஸ்., பொதுப்பள்ளி என, ஆறு மையங்களில், 1007 மாணவர்களும், 2,148 மாணவியரும் என, 3,155 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில், மாணவர்கள் 973 பேரும், மாணவியர் 2,083 பேரும் என, 3,056 பேர் தேர்வு எழுதினர். மாணவர்கள் 34 பேரும், மாணவியர் 65 பேரும் என, 99 பேர் தேர்வு எழுத வரவில்லை என, கோகுலம் பொதுப்பள்ளி முதல்வரும், நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளருமான சங்கரநாராயணன் தெரிவித்தார். இந்த மையங்களில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News