திருமங்கலம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்
திருமங்கலம் பகுதியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மாணவர்களால் பரபரப்பு;
By : King 24X7 News (B)
Update: 2024-01-07 12:28 GMT
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில் நிலையத்தை ஒட்டி உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழை காலங்களில் மழைநீர் தேங்கியதுடன் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாகிவிட்டது. இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் 10 க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 15 கிலோ மீட்டர் சுற்றிவர வேண்டிய அவலநிலை உள்ளது.
எனவே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை அகற்றக்கோரி பள்ளி மாணவர்கள் நேற்று ரயில் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் போலீசார் மாணவர்களை பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.