திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவிகள் பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Update: 2024-01-12 11:51 GMT
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவிகள் பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகை முன்னிட்டு கூட்டுறவுத் துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் திருப்பூருக்குமரன் மகளிர் கல்லூரியில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரியில் படிக்கின்ற 2500 மாணவிகள் பாரம்பரிய சேலை அணிந்து கலந்து கொண்டனர். கல்லூரி மைதானத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் குழுவாக பொங்கல் வைத்து குலவையிட்டனர். பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்த கல்லூரி மாணவிகள் கும்மி ஆட்டம், நாட்டுப்புற நடனம் ஆடி மகிழ்ந்தனர். பல்வேறு நாட்டுப்புற பாடல்களுக்கு மாணவிகள் குழுகுழுவாக மைதானத்தில் ஆட்டம் பாட்டத்துடன் பரஸ்பரம் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.
Tags:    

Similar News