21 வயது கல்லூரி மாணவியை திருமணம் செய்த 20 வயது மாணவன்
கன்னங்குறிச்சி பகுதியில் 21 வயது கல்லூரி மாணவியை திருமணம் செய்த 20 வயது மாணவன் - பெற்றோரை அழைத்து போலீசார் சமரசம்;
Update: 2024-03-23 01:58 GMT
காவல்துறை விசாரணை
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள சட்ட கல்லூரியில் மாணவ- மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரு மாணவியும், மாணவனும் திடீரென மாயமானதாக கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே அந்த மாணவனும், மாணவியும் திருமணம் செய்து ஏற்காட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மாணவன், மாணவியையும், அவர்களது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவிக்கு 21 வயதும், மாணவனுக்கு 20 வயதும் இருப்பது தெரிய வந்தது. எனவே மாணவனுக்கு திருமண வயது வரும் வரை இருவரும் வெவ்வேறு கல்லூரியில் படிப்பது என்றும், திருமண வயது வந்தவுடன் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து மாணவனும், மாணவியும் அவர்களது பெற்றோருடன் சென்றனர்.