கொங்கு சகோதயா கூட்டமைப்பு நடத்திய கபடி போட்டியில் நாமக்கல் நவோதயா பள்ளி மாணவர்கள் அபார வெற்றி !!

கொங்கு சகோதயா கூட்டமைப்பு நடத்திய கபடி போட்டியில் நாமக்கல் நவோதயா பள்ளி மாணவர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

Update: 2024-10-02 11:35 GMT

Navodaya School 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கொங்கு சகோதயா கூட்டமைப்பு நடத்திய கபடி போட்டியில் நவோதயா பள்ளி மாணவர்கள் அபார வெற்றி. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற கொங்கு சகோதயா கபடி போட்டியில் நாமக்கல் நவோதயா பள்ளி மாணவர்கள் அபார வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை 28.09.2024 அன்று திருப்பூர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய எட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையே கபடி போட்டி நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்றது. சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். வயது அடிப்படையில் 12வயதிற்குட்பட்டோர், 14 வயதிற்குட்பட்டோர். 16வயதிற்குட்பட்டோர், 19வயதிற்குட்பட்டோர் என நான்கு பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. காலை 8.30 மணிக்கு போட்டிகள் தொடங்கப்பட்டது. பள்ளியின் பொருளாளர் தேனருவி அவர்கள் போட்டியினைத் தொடங்கி வைத்தார்.

அவர் “பேசுகையில் தமிழரின் பாரம்பரியமான கபடி போட்டியில் கலந்துகொள்வதற்கு அதிகமான மாணவர்கள் ஆர்வமாக வருகை தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. மாணவர்களிடம் ஆரோக்கியமான போட்டி மனப்பாண்மையை வளர்ப்பதற்காத்தான் கொங்கு சகோதயா என்ற அமைப்பு உருவாக்கப்ட்டது. படிப்பைப் போலவே விளையாட்டிலும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.” நடைபெற்ற போட்டியில் நவோதயா பள்ளி மாணவர்கள் 12 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதல் இடத்தையும், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதல் இடத்தையும், 19வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இன்று 30.09.2024 காலை நடைபெற்ற பள்ளி வழிப்பாட்டுக் கூட்டத்தில் அனைவருக்கும் கோப்பையும், பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் ஆண்டனி ராஜ் அவர்கள் பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள், அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags:    

Similar News