தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் நவோதயா பள்ளி மாணவ, மாணவியர்கள் உலகசாதனை !!
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் நவோதயா பள்ளி மாணவ, மாணவியர்கள் உலகசாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் நவோதயா பள்ளி மாணவ, மாணவியர்கள் உலகசாதனை படைத்துள்ளனர். அக். 29. தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிலம்பம் சுற்றுதல் போட்டியில் நாமக்கல் கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள், கலந்துகொண்டு உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்னர்.
கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் நடைபெற்ற சிலம்பம் சுற்றும் போட்டியில் 6 ஆம் வகுப்பு மாணவிகள் வேதவள்ளி, வேதவியாசினி, ரியா கேசவன் (2ஆம்வகுப்பு) மூவரும் அதிக நேரம் சிலம்பு சுற்றி சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
திருச்சி லால்குடியில் கணநாதன் பாரம்பரிய தற்காப்புக்கலை அறக்கட்டளை நடத்திய மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் சஷ்வந்த் (3ஆம் வகுப்பு) அவர்கள் கலந்துகொண்டு இரண்டாவது பரிசு பெற்றுள்ளார், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் 6ஆம் வகுப்பு ஹிரி சுஜித் அவர்கள் கலந்துகொண்டு பரிசு பெற்றுள்ளார். இவர்கள் அனைவருக்கும் பள்ளியில் நடைபெற்ற வழிப்பாட்டுக்கூட்டத்தில் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளியின் செயலாளர், பொருளாளர், முதல்வர் ஆசிரியர்கள் சகமாணவ, மாணவியர்கள் அனைவரும் வெகுவாக பாரட்டினார்கள்.