பதக்கங்களை குவித்த வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள்
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த சிலம்பம் போட்டியில் வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பதக்கங்களை பெற்றனர்.;
Update: 2024-02-01 01:32 GMT
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த சிலம்பம் போட்டியில் வடக்கன்குளம் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பதக்கங்களை பெற்றனர்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று மாநில அளவிலான சிலம்பம் நடைபெற்றது.இப்போட்டியில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி.பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் யூ-19 பிரிவு ஒற்றை கம்பு வீச்சில் மாணவர் சிவ ஆதித்யா தங்க பதக்கம் வென்றார்.இரட்டை கம்பு வீச்சில் கெரிஷ் வெள்ளி பதக்கம், ராஜா வெண்கல பதக்கமும் பெற்றனர்.பதக்கம் பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டினர்.