சிவகங்கை அருகே தண்ணீர் தொட்டியை கழுவிய மாணவர்கள்: அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை அருகே தண்ணீர் தொட்டியை மாணவர்கள் கழுவிய விவகாரத்தில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-15 09:34 GMT
தண்ணீர் தொட்டியை கழுவிய மாணவர்கள்

சிவகங்கை அருகே தண்ணீா்த் தொட்டியை பள்ளி மாணவா்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யததாக எழுந்த புகாரையைடுத்து, தலைமை ஆசிரியரிடம் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். சிவகங்கையிலிருந்து சுமாா் 15 கி.மீ. தொலைவில் உள்ளது குமாரபட்டி ஊராட்சி.

இங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் சுமாா் 80 -க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியின் இரண்டாவது மாடியில் தண்ணீா்த் தொட்டியை சுத்தம் செய்ய மாணவா்களை, தலைமை ஆசிரியா் ஈடுபடுத்தியதாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுத்து, குமாரபட்டி பள்ளி தலைமை ஆசிரியா் சண்முகராஜாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தினாா்.

Tags:    

Similar News