நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆய்வுக் கூட்டம் !
பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-03-02 12:28 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக்குழுவினருக்கான பயிற்சி மற்றும் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகம், தலைமையில் நடைபெற்றது. நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி மற்றும் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகம், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் கோகுல், ஆகியோர் முன்னிலையில் இன்று (01.03.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மக்களவைப்பொதுத்தேர்தலில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுவினருக்கான பணிகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெளிவாக விரிவாக எடுத்துரைத்தார் . மேலும், வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச்செல்வது கண்டறியப்பட்டால் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், யாரிடம் அந்த பணத்தை ஒப்படைத்து சம்மந்தப்ட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவுசெய்திட தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 25.பெரம்பலூர் மற்றும் 27.சிதம்பரம்(தனி) மக்களவைத்தொகுதிகள் உள்ளன. பெரம்பலூர் மக்களவைத்தொகுதியில் பெரம்பலூர்(தனி), மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, துறையூர்(தனி) மற்றும் குளித்தலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், சிதம்பரம்(தனி) மக்களவைத் தொகுதியில் குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில்(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் அடங்கும். இதில் பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட 147.பெரம்பலூர்(தனி) மற்றும் 148.குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்கள் தலைமையில், உதவி காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள், ஒளிப்பதிவாளர் அடங்கிய பபறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் இந்தக்குழுவினர் சுழற்சி முறையில் தொடர்கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ.ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்).விஜயா, தேர்தல்பிரிவு வட்டாட்சியர் அருளானந்தம் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் கலந்துகொண்டனர்.