குற்றங்களை தடுத்தல் குறித்த ஆய்வுக் கூட்டம்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் POCSO சட்டத்தின் கீழ், பதியப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், பாதிக்கப்பட்ட குழந்தை அல்லது அவரது சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதியவும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் உள்ள தாமதத்தை களையவும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேவையான ஆவணங்களை காவல் துறையினர் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் நடைபெறும் புத்தாக்க பயிற்சியில் POCSO சட்டம் மற்றும் விதிகள் குறித்து பயிற்சி அளிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ், பதியப்படும் வழக்குகளில் வாதிகளுக்கு இலவச சட்டப்பணிகள் ஆணைக் குழு மூலமாக சட்ட உதவி வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் POCSO வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காணும் பொருட்டு சிறப்பு நீதிமன்றம் (Special POCSO Court) அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி அரசிற்கு பரிந்துரைக்கப்பட்டுஉள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு, வட்டார தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் மாணிக்கம், கூடுதல் அரசு குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குநர் ரமேஷ், அரசு தரப்பு வழக்கறிஞர், சட்ட பணிகள் ஆனைாக் குழு உறுப்பினர்கள், குழந்தைகள் நலக் குழுமம் மற்றும் இளஞ்சிறார் நீதிக் குழுமம் உறுப்பினர்கள், அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.