மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு இயன்முறை பயிற்சி ஆய்வு...
மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு இயன்முறை பயிற்சி மற்றும் சிறப்பு கல்வி வழங்கப்படுவதை மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஆய்வு செய்தார்.
Update: 2024-09-13 11:56 GMT
நாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட, பிறந்தது முதல் 18 வயது வரை உள்ள வீட்டு வழி பயிற்சி மற்றும் கல்வி பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் இயன்முறை பயிற்சி மற்றும் சிறப்பு கல்வி வழங்கப்படுவதை ஆய்வு செய்ய வீட்டிற்கே நேரடியாக சென்று மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் நாமக்கல் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சசிராணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். அப்பொழுது இயன்முறை மருத்துவர் கவியரசு மற்றும் சிறப்புப் பயிற்றுனர் ஸ்டெல்லா ஆகியோர் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் தற்போதைய நிலை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை விவரித்து கூறினார்கள்.