சப் இன்ஸ்பெக்டர் மகனைத் தாக்கி பணம் செல் போன் பறிப்பு !

ஆரல்வாய்மொழி அருகே சப் இன்ஸ்பெக்டர் மகனைத் தாக்கி பணம் செல் போன் பறிப்பு. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்ர்களை தேடி வருகின்றனர்.

Update: 2024-07-04 06:30 GMT

செல் போன் பறிப்பு

ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி.  இவர் பணகுடி போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் கணேஷ் (31) நாகர்கோவிலில் உள்ள  தனியார்  நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். கடந்த ஒன்றாம் தேதி இரவு 9 மணிக்கு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஆரல்வாய்மொழி அருகே நான்கு வழி சாலையில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முப்பந்தலில் உள்ள கண்ணு பொத்தை பகுதியில் இரண்டு பேர் வழி மறித்து, மோட்டார் சைக்கிள் பழுதாகி விட்டு விட்டது எனவும் உதவி செய்யுங்கள் எனவும் கூறியுள்ளனர்.  இதை உண்மையென நம்பிய கணேஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கினார். அதற்குள் கணேஷ் இரண்டு பேரும் சேர்ந்து தாக்கி, கணேஷிடம் இருந்த 25 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து கணேஷ் ஆரல்வாய்மொழி போலிசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்ர்களை தேடி வருகின்றனர். ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலை பகுதியில் இது போன்ற தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News