பொள்ளாச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகை

பொள்ளாச்சியில் பதனி, நீரா மற்றும் கள் இறக்கும் விவசாயிகளை போலீசார் துன்புறுத்துவதாக துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மனு அளித்தனர்.;

Update: 2024-06-21 09:56 GMT

மனு அளித்த விவசாயிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 35க்கும் மேற்பட்டோர் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தது தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பு தாக்கத்தை ஏற்படுத்தியது.  இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி  அடுத்த ஆனைமலை, கோட்டூர், உள்ளிட்ட பகுதியில் சில விவசாயிகள் தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் மற்றும் பதநீர் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.  

Advertisement

இதனால் போலீசார் விவசாயிகளிடம் கள் இறக்குவதை நிறுத்த வேண்டும் என்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  ஒரு சில விவசாயிகளை தீவிரவாதியை போல விசாரணை நடத்தியதாக புகார் தெரிவித்த விவசாயிகள் சிலர் பொள்ளாச்சி காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு கள் இறக்கி விற்பனை செய்வதாகவும் பூரண மதுவிலக்கு தேவை எனில் மதுபான கடைகளை மூடிவிட்டு எங்களிடம் அரசு கேட்கட்டும் மாநில அரசிடம் தவறை வைத்துகொண்டு விவசாயிகளை வஞ்சிப்பது நியமல்ல எனவும்,

இனி போலீசார் கள் இறக்கும் விவசாயிகளை தொந்தரவு செய்தல் பொள்ளாச்சி முக்கிய பகுதியான கோவை சாலை காந்திசிலை முன்பு கள் இறக்கி விற்பனை செய்யும் மறியல் போராட்டத்தை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு முடிவை எடுக்க நேரிடும் என்று போலீசாருக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News