விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

கடையநல்லூரில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கினர்.

Update: 2024-06-18 04:21 GMT

கடையநல்லூரில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கினர்.


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாரம் தோட்டக்கலைத்துறை மூலம் தென்னையில் வேர்வாடல் நோய் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்காசி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி உத்தரவின்படி தென்னகன்றுகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டது. இதில் கடையநல்லூர் யூனியன் சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமை வகித்து விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News