SC, ST யினருக்கு விவசாய நிலம் வாங்க மானியம்
SC, ST யினருக்கு விவசாய நிலம் வாங்க மானியம் - ஆட்சியர் ராஜகோபால் தகவல்;
By : King 24x7 Website
Update: 2023-11-27 18:05 GMT
SC - ST யினருக்கு விவசாய நிலம் வாங்க மானியம் - ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் தகவல்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50% அல்லது அதிகப்பட்சம் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் எனவும் , சந்தேகங்களுக்கு 0424-2259453 தொடர்பு கொள்ளலாம் எனஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.