நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம்!
நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-25 15:41 GMT
திருவண்ணாமலை ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் கிராம பகுதிகளில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டுகோழி வளர்ப்பில் திறமையும், ஆர்வமும் உள்ள பயனாளிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் ஜூலை.5 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.