முத்திரைப் பதிவு, அறிவுசார் சொத்துரிமை செலவினங்களுக்கு மானியம் - ஆட்சியர்

தொழில் நிறுவனங்களின் வர்த்தகம், முத்திரைப் பதிவு மற்றும் அறிவுசார் சொத்துரிமை செலவினங்களுக்கான மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். -

Update: 2024-07-03 08:03 GMT

ஆட்சியர் ஜெயசீலன்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்திற்கு காப்புரிமை/வர்த்தக முத்திரை பதிவு / புவியியல் குறியீடுகள் பெற்றமைக்கு ஏற்படும் செலவினத்தை மானியமாக பெறும் வகையில் “அறிவுசார் சொத்துரிமைக்கான சொத்து உருவாக்கத்திற்கான மானியம்; என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது .

இத்திட்டத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  இந்தியாவிலோ அல்லது வெளி நாட்டிலோ தங்கள் நிறுவனத்திற்கு காப்புரிமை பதிவு செய்தமைக்கான செலவில்  75 சதவீத தொகையை (அதிக பட்சமாக ரூ.3 லட்சம் மானியம்) அரசு வழங்குகிறது. மேலும் வர்த்தக முத்திரை பதிவு / புவியியல் குறியீடுகள் பதிவுக்கான விண்ணப்பததை தாக்கல் செய்தமைக்கான செலவில் 50 சதவீதம் (அதிக பட்சமாக ரூ.25000/-) மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டமானது வர்த்தக முத்திரை பட பெறும் தீப்பெட்டி தயாரிப்பு நிறுவனங்கள், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், உணவுப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மருத்துவத்துணி உற்பத்தி நிறுவனங்களுக்கு செலவினத்தை திருப்பிப் பெற முத்தாய்ப்பான வாய்ப்பாக அமையும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேற்கூறிய பதிவுகள் பெற்ற ஆறு மாத காலத்திற்குள் இணையதளம் மூலம் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், விருதுநகர், (தொலைபேசி எண்கள் முறையே : 90800-78933, 99440-90628)  என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News