நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் உயிரிழப்பு; குடும்பத்தினர் சந்தேகம்

தரகம்பட்டியில் நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

Update: 2024-05-22 11:51 GMT

தரகம்பட்டியில் நெஞ்சு வலியால் அவதிப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, தரகம்பட்டி வையாளி மடை பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் வயது 65. இவர் தரகம்பட்டியில் செயல்படும் அரசு கருவூலத்தில் தற்காலிக பாதுகாவலராக பணியாற்றி வந்தார். கடந்த 5- வருட காலமாக இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று, மருந்து மாத்திரைகள் உட்கொண்டு வந்தார்.

இந்நிலையில் மே 21ஆம் தேதி அதிகாலை 3:30 மணி அளவில் திடீரென அவருக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த தாமோதரனின் மனைவி விஜயா வயது 55 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த தாமோதரனின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.

Tags:    

Similar News