அடிப்படை வசதிகள் கோரி திடீர் சாலை மறியல்

விக்கிரமங்கலம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியல் செய்தனர்.

Update: 2024-01-13 05:43 GMT

விக்கிரமங்கலம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியல் செய்தனர்.  

விக்கிரமங்கலம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியல் செய்தனர்.

 மதுரை மாவட்டம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கீழமட்டையன் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களது கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்துதரவில்லை எனக் கூறி விக்கிரமங்கலம் செல்லும் சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு. தகவல் அறிந்து வந்த காடுப்பட்டி போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கீழமட்டையான் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் கிராமத்திற்கு ஊராட்சி மன்ற தலைவராக முருகேஸ்வரி இருந்து வருகிறார். ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்று நான்காண்டுகளாகியும் தங்களது கிராமத்திற்கு இன்னும் அடிப்படை வசதிகள் ஆன சாலை வசதி திருவிளக்கு வசதி குடிநீர் வசதி என அனைத்து வசதிகளும் செய்து தராமல் இருந்து வந்துள்ளார். அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பலரிடமும் கிராம பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கும் எடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் இன்று காலை கீழ மட்டை ஆண் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் விக்கிரமங்கலம் செல்லும் சாலையில் தங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை எனக் கூறி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

சம்பவம் அறிந்து வந்த காடுப்பட்டி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர் பதவியேற்று நான்கு ஆண்டுகள் ஆகியும் தங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தராததால் தமிழகத்தில் பின்தங்கிய கிராமமாக இருப்பதாகவும் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதிப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர் இதனால் இப்போது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News