உடல்நல கோளாறால் அவதி - முதியவர் தற்கொலை

அத்திப்பாடியில் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷமருந்தி தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-19 05:19 GMT

பைல் படம் 

.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி கிராம பகுதி சேர்ந்தவர் ஆறுமுகம் 80 இவர் கடந்த ஒரு வருடமாக முழங்கால் வலி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் கடந்த 14 5 2024 மாலை 6 மணி அளவில் ஊரின் அருகில் உள்ள ஓடையில் இருந்த விஷச்செடி ஒட்டன் தலை பறித்து வந்து வேகவைத்து குடித்து விட்டதாக அவரது மகள் சின்ன பாப்பா கண்டுபிடித்து உறவினர்களிடம் கூறியதைத் தொடர்ந்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் இறந்த நபரின் மகன் மாரியப்பன் அளித்த புகாரின் பெயரில் சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் சந்திரகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மேலும் இறந்த நபரின் உடல் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News