மேட்டூரில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை
சேலம் மாவட்டம் ,மேட்டூரில் டிராக்டர் ஓட்டுநர் விஷம் கலந்த மதுவை குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டூர் அருகே கொளத்தூர் லக்கம்பட்டி பகுதியை சேர்ந்த டிராக்டர் ஒட்டுனர் பாரதி(33). இவருக்கு சபீனா என்ற பெண்ணுடன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. பாரதி நேற்று மாலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், இன்று தார்க்காடு ஏரிகரையில் பாரதி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாத போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற கொளத்தூர் போலீசார் பாரதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன பாரதி குடும்ப தகராறு காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.