கோடைகால இலவச கபடி பயிற்சி : மாணவிகளுக்கு அமைச்சர் சான்றிதழ் வழங்கினார்

நாலுமாவடியில் கோடைகால இலவச கபடி பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு அமைச்சர் அனிதா ஆர்.இராதா கிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார்.

Update: 2024-05-19 10:52 GMT
அமைச்சர் சான்றிதழ் வழங்கினார்

தூத்துக்குடி மாவட் டம் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனமும், நாலுமாவடி புதுவாழ்வு சங்கமும் இணைந்து பெண்களுக்கான 2 ஆம் ஆண்டு கோடை கால இலவச கபடி பயிற்சி முகாம் நாலுமாவடி ஏலீம் கார்டன் வளாகத்தில் மே 9 முதல் 18ம் தேதி வரை நடந்தது. இப்பயிற்சி முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் 112 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 6 சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கபடி பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமின் இறுதி நாளில் மாணவிகளுகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட அமச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயேசு விடுவிக்கிறார் விளையாட் டுத்துறை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட அமச்சூர் கபடி கழகத் தலைவரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர்.இராதா கிருஷ்ணன் மாணவர் களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் மணத்தி கணேசன், மணத்தி எட்வின் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News