கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கோடை மழை பெய்தநிலையில், வெப்பம் தணிந்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Update: 2024-05-08 11:55 GMT
தமிழகத்தில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் அக்கினி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் தொடங்கியதும் மேலும் அதிகமாக காணப்பட்டது இந்நிலையில் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளான நாச்சியார்கோவில், துக்காச்சி, திருச்சேறை, திருநறையூர், ஏனநல்லூர் போன்ற பல பகுதிகளில் திடீரென கோடை மழை பெய்ததால் சற்று வெப்பம் தணிந்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.