தஞ்சை சுற்று வட்டாரப் பகுதிகளில் கோடை மழை

கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரையில் அதிகபட்சமாக 70 மி.மீ. மழை பதிவானது.

Update: 2024-06-10 04:19 GMT

தஞ்சை மாவட்டத்தில் மழை 

 தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அணைக்கரையில் 70 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. 

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

அணைக்கரை 70, அய்யம்பேட்டை 34, கும்பகோணம் 22, பாபநாசம் 21.4, திருவிடைமருதூா் 16, குருங்குளம் 9.4, பூதலூா் 8.2, மஞ்சளாறு 5.6, திருக்காட்டுப்பள்ளி 5.2, திருவையாறு 4, மதுக்கூா் 3.8, கல்லணை 2.6 மி.மீ.

Tags:    

Similar News