கோடை பயிற்சி முகாம் நிறைவு விழா
பெரம்பலூரில் அரசு இசை பள்ளி வளாகத்தில் கோடை கால பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது.
திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம், பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடை கால கலை பயிற்சி முகாமினை பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு இசை பள்ளி வளாகத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்றது,
இந்த பயிற்சி முகாமில் 5 முதல் 16 வயது வரையிலான பள்ளி மாணவ- மாணவிகளுக்கு குரலிசை, பரதநாட்டியம், ஓவியம்,சிலம்பம் ஆகிய கலைகளுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 230 பள்ளிமாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
பயிற்சி முகாமின் நிறைவு நாளான முன்தினம் பங்கேற்பு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாகவல்லி கலந்து கொண்டு கலை பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கினார். முன்னதாக மாணவ-மாணவிகளின் பரதநாட்டியம், குரலிசை, கராத்தே, சிலம்பம் ஆகியவை நடந்தது. மாணவ- மாணவிகள் வரைந்த ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலர் லோகேஷ்வரன் செய்திருந்தார். வருகிற ஜீன் மாதம் முதல் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஜவகர் சிறுவர் மன்றம் மூலம் 5 வயது முதல் 16வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு , குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம் ஆகிய கலை பயிற்சி வகுப்புகள் கட்டணத்துடன் அரசு இசைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.