சங்ககிரி அருகே உயர்மின் கோபுரம்,மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

சங்ககிரி அருகே எம்பி நிதியிலிருந்து9 லட்சம் மதிப்பீட்டில் புதிய உயர்மின் கோபுரம் திறப்பு, மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

Update: 2024-02-27 10:35 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயிர் மின் கோபுரம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசிராமணி பேரூராட்சி குள்ளம்பட்டி பகுதியில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 2.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரம் மற்றும் தேரவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 6.65 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களும் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் AKP சின்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான E.R. ஈஸ்வரன் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரத்தை திறந்து வைத்தும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்களையும் வழங்கியும் சிறப்பித்தார். அப்போது சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் மாது, அரசிராமணி நகர செயலாளர் ராஜ்குமார், தேவூர் பேரூராட்சி தலைவர் தங்கவேல் உட்பட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News