ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
கே.ஆர்.தோப்பூர் பவர் கிரேட் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Update: 2024-06-24 05:22 GMT
சேலம் மாவட்டம்,தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூரில் இந்திய அரசு நிறுவனமான பவர் கிரேடு உள்ளது. இதன் சார்பில் 2023-24 ம் ஆண்டுக்கான சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் தாரமங்கலம் கே.ஆர்.தோப்பூர், மாட்டையாம்பட்டி ஆகிய பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.28 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டில் இ.சி.ஜி., எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடந்தது.
மாவட்ட சுகாதார அலுவலர் சவுந்தம்மாள், வட்டார மருத்துவ அலுவலர் பத்மப்பிரியா, பவர் கிரேட் பொது மேலாளர் சந்திரன், அதிகாரிகள் மனோகரன், சுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்து கவுண்டர் நன்றி கூறினார்.