திருச்சி மாநகராட்சிக்கு ரூ.5 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்
சமூக பங்களிப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தில், திருச்சி மாநகராட்சிக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி வழங்கியுள்ளது.;
Update: 2024-01-31 07:14 GMT
மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பெண் தன்னாா்வலா்கள் பொதுமக்களுக்கு வீடு தேடிச் சென்று சா்க்கரை அளவு பரிசோதனை, உயா் ரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த தன்னாா்வலா்களின் பணிகளுக்கு உதவிடும் வகையில் மருத்துவ உபகரணங்கள் (உயா் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் கருவிகள்- 140) இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் அளிக்கப்பட்டது. வங்கியின் சமூக பங்களிப்புத் திட்டத்தின் கீழ், இந்த உபகரணங்களை திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் மு. அன்பழகனிடம், வங்கி நிா்வாகத்தினா் வழங்கினா். இந்த நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மாநகா் நல அலுவலா் தி. மணிவன்னண், வங்கியின் மண்டல மேலாளா் டி. காமேஸ்வரராவ், தலைமை மேலாளா் ஹரீஸ் மற்றும் மாமன்ற உறுப்பினா்னா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.