அரசு பள்ளி மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கல் - அமைச்சர் பங்கேற்பு

திருப்பத்தூரில் அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.

Update: 2024-06-13 04:57 GMT

பாட புத்தகங்களை வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், ஆதாா் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜீத் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் மாணவிகளுக்கு பள்ளி கல்வித் துறையின் சாா்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்
Tags:    

Similar News