விவசாயிகளுக்கு தக்கை பூண்டு விதைகள் வழங்கல்

வாட்டாத்திக்கோட்டை ஊராட்சியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தக்கை பூண்டு விதைகள் வழங்கப்பட்டது.

Update: 2024-06-21 08:30 GMT

தக்கை பூண்டு விதைகள் வழங்கல்  

தமிழக அரசின் வேளாண்மை துறையின் கீழ் முதலமைச்சரின் சிறப்பு திட்டமான மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள வாட்டத்திக் கோட்டை ஊராட்சியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தக்கை பூண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி வா.கொல்லைக் காட்டில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி முன்னிலை வகித்து, விவசாயிகளுக்கு தக்கைப் பூண்டுகளை வழங்கினார். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் குறித்து பேராவூரணி உதவி வேளாண்மை அலுவலர் (பொறுப்பு) ராணி விவசாயிகளிடம் விளக்கினார்.அட்மா திட்ட அலுவலர் பொன். செல்வி. கால்நடை மருத்துவர் ராஜிவி உள்ளிட்ட அலுவலர்கள் திரளான விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் வர்ஷா நன்றி கூறினார்.

Tags:    

Similar News