விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள் வழங்குதல்
கடலூரில் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.;
Update: 2024-03-01 07:01 GMT
மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா
தமிழக முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமானிக்குழியில் கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் மற்றும் எம்ஆர்கே கல்வி குழும தலைவர் எம்ஆர்கேபி கதிரவன் விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகளை இன்று வழங்கினார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழக கொடியேற்றி அன்னதானம் வழங்கினார். உடன் ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக செயலாளர்கள் P.சுப்பிரமணியன், D.காசிராஜன், பொதுக்குழு உறுப்பினர் KPR.பாலமுருகன் உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.