துணை நடிகைக்கு பாலியல் தொல்லை - காவல்நிலையத்தில் புகார்
வளசரவாக்கத்தில் துணை நடிகைக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் திலோத்தமா (30). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீராம் நகரில் தனது அத்தையுடன் வசித்து வருகிறார். திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி தனது அத்தை பத்மா சொந்த வேலை காரணமாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார். வீட்டில் திலோத்தமா தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த 4 பேர் கொண்ட கும்பல் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.
வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அப்போது, ஒருவர் பின் ஒருவராக பாலியல் வன்புணர்வு செய்து திலோத்தம்மாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த துணை நடிகை திலோத்தம்மா, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், நேற்று தன் அத்தை வீட்டில் தனியாக இருந்ததாகவும், அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்து கொடுமைபடுத்தியதாகவும் கூறியுள்ளார். நடிகர் ரமணா ஓட்டுநர் கைது பின்னர் அந்த கும்பல் ஒருவர் பின் ஒருவராக தப்பிச் சென்றதாகவும் புகாரில் கூறியுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர். முதல்கட்ட தகவலில், நடிகர் ரமணாவின் கார் டிரைவர் முருகேசன், தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த கல்யாண குமார், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அருண்பாண்டி, மாரியப்பன், பெரிய தம்பிராஜ், முப்பிதாதிஆகிய ஆறு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பிரபலமான இடத்தில் துணை நடிகை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, தப்பிச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், இந்த சம்பவத்தின் முழு பின்னணியையும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
நடிகர் ரமணாவின் கார் ஓட்டுநரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், திலோத்தம்மாவுக்கும் அவர்களுக்கு ஏற்கனவே பழக்கம் இருக்கிறதா?, அவர் தனியாக இருந்ததை இந்த கும்பல் எப்படி அறிந்து கொண்டது என்பது உள்ளிட்ட கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில் முடிவில் பல சர்ச்சைக்குரிய உண்மை விஷயங்கள் வெளியாகவும் வாய்ப்பு இருக்கிறது.